கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதிsrimathi கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பரபரப்பு ஆரம்பத்தில் இருந்தே நீடித்து வரும் நிலையில்,மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதி மன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து ஸ்ரீமதியின் செல்போன் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீமதி பெயரில் கட்டிய இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க சான்றிதழ் கேட்டு அரசு மருத்துவர் தரப்பினரிடம் ஸ்ரீமதியின் தாயார் செல்வி பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மெடிக்கல் சான்றிதழ் தரமுடியாது என்று சொல்வதற்கு என்ன காரணம் என ஆவேசமாக பேசுவது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், ’மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள செல்போன் மீது சிபிசிஐடி விசாரணை நம்பக தன்மை இல்லை’ என்றும் நீதிமன்ற உரிய விசாரணை நடத்த படவில்லை என்று தமிழ் தேசிய ஆதரவாளர் முகில் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது தொடர்பாக நமது i tamil News வலைதளத்திற்கு பேட்டியளித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
- மாணவி மரணம் தொடர்பான வழக்கு முக்கிய காரணமாக எருப்பது மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல் ஃபோன் . இதை ஏன் இப்பொழுது தந்ததற்க்கு காரணம் என்ன ?
- youtuber செல் ஃபோன் என மொத்தம் 56 செல் ஃபோன் விசாரணைக்கு வந்தது ஏன்?
- விடுதலை சிறுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எதிராக திமுக செயல் படுகிறது .. ஏன் ?
இது போன்ற கேள்விகளுக்கு தமிழ் தேசிய ஆதரவாளர் முகில் பதில் உள்ளார் இந்த வீடியோ பதிவில் காணலாம்