சென்னையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அதன் படி சென்னையில் கடந்த வாரம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லூரி வளாகங்களில் கண்கானிப்பு மற்றும் கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இத்தனை அடுத்து கொரோனா தொற்று, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.