இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படும் சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டுமென கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில், 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இது போன்ற ஊக்கப்படுத்தலின் மூலம் மாணவர்களின் தேசிய ஒற்றுமை மற்றும் பண்பாடுகள் போற்றபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.