தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது வெளியில் அவர் கூறும் கருத்துக்கள் மிக பெரிய சர்ச்சையாக உருமாறுகிறது . அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த விஷயங்கள் குறித்து அவர் கூறும் கருத்துக்கு பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
அந்தவகையில் பொது வெளியில் வள்ளலார் குறித்த பேசிய ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது :
மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார் ஆளுநர் .
ஆளுநர் அவர்களே வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார் .