subramanian swamy-பிரதமர் மோடி ராமரை பின்பற்றவில்லை என பா.ஜ.க மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழா:
கடந்த 2019-ம்ஆண்டில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராமர் கோவிலின் முதற்கட்ட கட்டிட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.
இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம்,
மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைக்கப்பட்டது.
மேலும் கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கி 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை கோவில் கருவறையில் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர்மோடி, உத்தர பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
குழந்தை ராமரை வழிபட பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்க 200 டன்னுக்கும் அதிகமான மலர்கள், 150 டன்னுக்கும் அதிகமான அசோக மரஇலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி ராமரை பின்பற்றவில்லை என பா.ஜ.க மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749339478257463319?s=20
சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்:
இந்நிலையில், பிரதமர் மோடி ராமரை பின்பற்றவில்லை என பா.ஜ.கவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “அயோத்தி ராமர் கோயில் பூஜையில் மோடியின் பிரதமர் என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரை பின்பற்றியது இல்லை. குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராக நடக்கவில்லை” என சுப்பிரமணியன் சுவாமி (subramanian swamy)தெரிவித்துள்ளார்.