நாடு முழுவதும் உள்ள சீன மொபைல் நிறுவனங்களின் பல வளாகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதால், முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளான Xiaomi மற்றும் OPPO ஆகியவை அதிர்ச்சி அடைந்துள்ளது.
காலை 9 மணியளவில் தொடங்கிய தேடுதல்களை நடத்துவதற்கு ஐ-டி துறையால் பல குழுக்கள்அமைக்கப்பட்டன.ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ய விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும், ஐ-டி துறை உட்பட பல ஆய்வு நிறுவனங்களின் எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் அந்த நிறுவனம் நாலாயிரத்து 389 கோடி ரூபாய் அளவுக்குச் சுங்கவரி ஏய்த்துள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தினர்.
இதில் ஓப்போ நிறுவனம் தவறான அறிக்கை அளித்து 2981 கோடி ரூபாய் சுங்கவரி விலக்குப் பயன் அடைந்துள்ளதும், 1408 கோடி ரூபாய் வரி ஏய்த்துள்ளதும் தெரியவந்துள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் “சில குழுக்கள் சீன மொபைல் நிறுவனங்களின் கிடங்குகளிலும் சோதனை நடத்தினர். அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்ட ஆவணங்களை மீட்டுள்ளனர்” என்று தகவல்கள் வெளியாகியுள்ளனர்.