Sudden Twist : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளையுடன் முடிவடைய உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனின் பிரம்மாண்டமான கிராண்ட் பினாலே கோலாகலமாக நடைபெற உள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று நடந்த மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார்.
105 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி ஆகிய ஐந்து பேரில் ஒருவர் தான் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட உள்ளனர்.
மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை அர்ச்சனா முதலிடத்திலும், மாயா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தார்.
ஆனால், கடந்த இரு தினங்களாக மணிச்சந்திராவுக்கு வாக்குகள் வேகமாக குவிந்து வருகிறது (Sudden Twist). இதற்கு ரவீனா தான் எனக் கூறப்படுகிறது. அவர் வெளியே இருந்து மணிக்காக வாக்கு சேகரிப்பில் இறங்கி உள்ளாராம்.
இதனால் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் மாயா. அவரை விட அதிக வாக்குகள் பெற்று தினேஷ் மூன்றாவது இடத்துக்கு சென்றிருக்கிறார்.
இதனால் பைனல் மேடையில் இடம்பெற உள்ள இருவரில் அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அர்ச்சனா முன்னிலை வகிப்பதால் அவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745689126777827350?s=20
இந்த சீசன் முழுக்க மாயாவுக்கு கமல்ஹாசனின் ஆதரவு இருந்து வந்த நிலையில், இறுதிப்போட்டியில்,
கமல் நினைத்தால் ரிசல்ட் தலைகீழாக மாறி மாயாவுக்கு டைட்டில் கிடைத்தாலும் கிடைத்துவிடும் என நெட்டிசன்கள் ஒருபுறம் புலம்பி வருகின்றனர்.
இப்படியான சூழலில், டைட்டிலை ஜெயித்து ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் தட்டிச் செல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.