தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ( SUMMER VACATION OVER ) இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது . வழக்கமாக மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.
Also Read : 3வது முறையாக பிரதமரான மோடி – மத்திய அமைச்சர்கள் பட்டியல் இதோ..!!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானதால், பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், சீருடைகளை இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2024-25 கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள நிலையில் அதன்படி ( SUMMER VACATION OVER ) பள்ளிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .