தமிழ் சினிமாவில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. இதையடுத்து மாசிலாமணி, வம்சம், சில்லு கருப்பட்டி என பல படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார் . கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான லத்தி என்ற படத்தில் சுனைனா நடித்திருந்தார் .
கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் வெளியான ‘லத்தி’ படத்திற்கு பிறகு நடிகை சுனைனா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘ரெஜினா’. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சுனைனாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
இதுவரை அமைதியான கதாபாத்திரங்களையே அதிகம் கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகை சுனைனா, இந்த படத்தில்… சிகரெட், கிக்கேத்தும் முத்த காட்சி என எல்லை மீறி நடித்துள்ள காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
நொடிக்கு நொடி மிரள வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ சுனைனாவின் ‘ரெஜினா’ பட டிரைலர்…