Sunday Special : நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.. நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு சுடசுட வெந்தையக்களி செய்து கருப்பட்டி, நல்லெண்ணையுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.. உடல் சூடு முதல் வயிற்றுப்புண் வரை அத்தனையும் பறந்துவிடும்.
வெந்தையக்களி நன்மைகள் :
- உடலை வலுவூட்டும்.
- உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
- செரிமானம் சீராகும்.
- வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
வெந்தையக்களி செய்ய தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – 300 கிராம்
உளுந்தம் பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கருப்பட்டி – 300 கிராம்
செய்முறை (Sunday Special) :
புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, 3 மணிநேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
முதலில், உளுத்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புழுங்கல் அரிசியையும் நைசாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : பட்டாசு ஆலை விபத்து : ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – ராமதாஸ்!
இப்போது அரிசி மாவையும், உளுந்து, வெந்தய மாவையும் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அடி கனமான சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவையும் சேர்த்து கரண்டியால் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
20 நிமிடம் கழித்து களி போல நன்றாகத் திரண்டு வெந்து வரும்போது, அடுப்பை அனைத்து விட்டு அதனுடன் காய்ச்சி வடிகட்டி எடுத்து வைத்துள்ள கருப்பட்டியையும் சேர்த்துக் கிளற வேண்டும்.
இதையும் படிங்க : ‘ராம் லல்லாவுக்கு ஓய்வு’ – ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ்
பாத்திரத்தில் கிளறும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு நன்கு கிளற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம். அல்லது கருப்பட்டியை காய்ச்சி மாவுடன் சேர்த்து கிளறாமல்,

களி வெந்தவுடன் ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன் நடுவே கைகளினால் பள்ளம் போட்டு அதனுள் தனியாக பொடி செய்து வைத்துள்ள கருப்பட்டியை போட்டு அதோடு நல்லெண்ணெய் ஊற்றி குழைத்தும் சாப்பிடலாம்.