அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் அடுத்தடுத்த ரெய்டுகளால் அதிர வைத்த அமலாக்கத்துறை . சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது .
இதையடுத்து தீடீர் நெஞ்சுவலியால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட செந்திபாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . அறுவைக்கு சிகைச்சைக்கு பின் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ள A பிரிவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் , நீதிபதிகள் போபண்ணா , எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து வந்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்து தீர்பளித்துள்ள உச்சநீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை எனவும் அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர் .