தல’ தோனிக்கு வீடியோ வெளியிட்டு சுரேஷ் ரெய்னா(Suresh Raina) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இவருக்கு பல்வேறு முக்கிய தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எனது பெரிய சகோதரருக்குMS தோனி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும்,முதல் நாள் சந்திப்பு முதல் நமது கனவுகளைப் பகிர்ந்து கொள்வது வரை, நாம் உருவாக்கிய பந்தம் பிரிக்க முடியாதது.
உங்கள் பலம், ஒரு தலைவராகவும், நண்பராகவும், எனக்கு வழிகாட்டும் வெளிச்சம். வரும் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும். பிரகாசித்துக்கொண்டே இருங்கள் என்று தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.