இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சைனஸ் தொடர்பான சிறிய வழக்கமான அறுவை சிகிச்சை நடந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சைனஸ் தொந்தரவு காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதனால், அவருக்கு லண்டனில் உள்ள நேஷனல் ஹெல்த் சர்வீஸ் அரசு மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை நேற்று நடந்தது.
இந்த சிகிச்சைக்காக அவர் நேற்று காலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு சென்றதாகவும், மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்ததும் காலை 10 மணிக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்திற்கு திரும்பியதாகவும் அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும் இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், போரிஸ் ஜான்சன் நலமாக இருப்பதாகவும், வீட்டில் ஓய்வெடுப்பதாகவும், திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை காலை அமைச்சரவை கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவித்துள்ளது.