ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 45’ திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா இடைப்பட்ட காலத்தில் பெரிதளவில் வெற்றிப்படங்களை கொடுக்க முடியாமல் இருந்த நிலையில் சூரரை போற்று படம் முத்த மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறார்.
அந்தவகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே கங்குவா மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பலநூறு கோடிகளை வசூல் செய்து வெற்றிப்படமாக உருவெடுத்தது.
Also Read : இந்தியர்களை வெளியேற்றப்போகிறாரா டிரம்ப் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!
இதையடுத்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்ற விவரம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இப்படத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாக நடிகை த்ரிஷா கமிட்டாகி உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
இதன்மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா – த்ரிஷா காம்போ அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.