டி20 உலகக்கோப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி தற்போது தங்களது ( team india ) பயிற்சியை தொடங்கியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா சார்பில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் என்று பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட போகும் இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது .
Also Read : ரூ.4 கோடி விவகாரம் – நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்..!!
அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ் ஆகியோர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை நியூயார்க்கில் இந்திய அணி ( team india ) தொடங்கியுள்ளது . ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் மோத உள்ள நிலையில் தற்போது இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது.