தமிழ் நடிகர், நடன இயக்குனர் உள்பட பல்வேறு திறமைகளை கொண்டவர் கோகுல் என்பது தெரிந்ததே. இவர் கோகுல்நாத் என்ற பெயரில் ஒரு பள்ளி நடத்தி வருகிறார் என்பதும் அதில் பல குழந்தைகள் பல்வேறு பயிற்சிகளை பயின்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோகுல்நாத் பெயர் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘2022ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம்பெற்றுள்ளதை பார்த்து சிறு குழந்தையை போல் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஏற்கனவே கோகுல்நாத் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் கின்னஸ் சாதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.