மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட போது கே.என்.நேரு கோபமடைந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக அமைச்சர்கள் சென்னை,மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை அமைத்து நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில்,திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் கே.என்.நேருவுடன் இந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
கண்காட்சியைப் பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
முதல்வரின் சிறு வயது புகைப்படம் மற்றும் சிறை சென்ற புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்தாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிலை அடைவதற்கு பல வலிகளையும்,தியாகங்களையும் தாண்டி வர வேண்டி உள்ளது என இந்த புகைப்படக் கண்காட்சி உணர்த்துகிறது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து நடிகர்கள் மட்டுமே இந்த புகைப்படக்கண்காட்சியை பார்வையிடுகின்றனர் என்ற செய்தியாளர் கேள்விக்கு சென்னையில் நடிகர் கமல் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நடிகர்கள் வடிவேலு, சூரி ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
மேலும் நடிகர்கள் பார்வையிட்டு வருவது கண்காட்சியை மக்கள் மத்தியில் விரைவாக கொண்டு சேர்க்கும் என தெரிவித்தார். இது ஒரு நல்ல முயற்சி என்று தெரிவித்தார்.
பின்னர் மாவீரன் படமும் ரஜினியின் டெய்லர் படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது என செய்தியாளர் கேள்விக்கு,அது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்த பொது கோபமடைந்த அமைச்சர் நேரு செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.