Shanmugasundaram:தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆண்டில் ,திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக அவர் நியமிக்கப்பட்டார்.
1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சிபிஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் வாதாடியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த எம்.சி.ஜெயின் விசாரணை ஆணையம் உட்பட பல விசாரணைகளுக்கு சண்முகசுந்தரம் அரசு சார்பாக வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி இருந்தார். 1996 முதல் 2001 வரையில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அடுத்த தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சண்முகசுந்தரம் வாழ்க்கை குறிப்பு:
இராஜகோபால் சண்முகசுந்தரம் என்பவர் தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய அவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1953 இல் பிறந்தார்.
Also Read :https://itamiltv.com/delhi-police-social-media-post-goes-viral/
தந்தை ராஜகோபாலை போலவே இவரும் சட்டத்தை நோக்கி பயணம் மேற்கொண்டார். அப்படி வழக்கறிஞராக இருந்த அவரது வாழ்க்கை பல்வேறு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
சண்முக சுந்தரம் தனது பட்டப்படிப்பை முடித்து 1977 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.
1989 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் திமுக ஆட்சியில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர் .
மேலும் 1996-2001 திமுக ஆட்சியில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி அரசு வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர்.
Also Read :
இரண்டு மற்றும் மூன்று இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.https://x.com/ITamilTVNews/status/1744994568049954936?s=20
1995 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ஜெயலலிதா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப் போகும் போது இவர் தாக்கப்பட்டார்.
2002-2008 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகசுந்தரம்(Shanmugasundaram) இருந்தார்.”வெல்டிங் “குமார் மற்றும் 6 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்குதண்டனை பெற்றனர்