சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலிஸ்வரர் கோயிலில் நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமிதா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
மேலும் கோவிலில் 1008 தாமரை மலர்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். அதன் பின்னர் திருக்கோயிலில் இலவசமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமீதா, “என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளேன். இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.
கர்நாடகா தேர்தல் குறித்து செய்தியாளர் கேள்விக்கு பாஜக பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் வெற்றி பெற வேண்டும் . இதற்காக இன்று 1,008 தாமரை மலர்களை வைத்து இந்த சிறப்பு பூஜையை மேற்கொண்டேன்.
கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. மேலும் கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதேபோல தமிழகத்திலும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.