முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை இன்று புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்கும் நிலையில், அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.
மும்பையில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்க உள்ளார். மேலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் மும்பை சென்றுள்ளார்.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள கூட்டத்திலும் பங்கேற்ற பிறகு மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
அதோடு, மும்பையில் இன்று தொடங்க உள்ள 3வது கூட்டத்தில் புதிதாக 2 கட்சிகள் இணைந்துள்ளன.
இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து திமுக உள்பட சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
அந்த வகையில், பாஜக அரசை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, இன்று தொடங்க உள்ள 3வது ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.