12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உழைப்பாளர் தினமான மே நாளையொட்டி, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய அவர் உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம் தொழிலாளத் தோழர்களின் நலன் காப்பதில் தி.மு.கழகமும், திராவிட மாடல் அரசும் என்றென்றும் முன்னிற்கும். திராவிட இயக்க இலட்சியங்கள், பொதுவுடைமைக் கொள்கைகளால் நிறைந்தது. அதனால்தான் கருப்பும் சிவப்பும் கலந்து இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் உழைப்பால் உலகுக்கு ஒளி வழங்கும் உழைப்பாளர் வாழ்வில், எண்ணற்ற திட்டங்களால் தி.மு.க. அரசு. ஒளியேற்றியது.இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை சிந்தாந்திரிபேட்டையில் மே தின நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்தார்.மேலும் மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி எம்எல்ஏக்களுக்கு செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.