நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் ஏன் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது :
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிதீர்த்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இந்த கனமழையின் காரணமாக வயநாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலச்சரவில் சிக்கி இதுவரை 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளத செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
Also Read : தமிழகத்துக்கு தம்படி காசு கூட வழங்கப்படாது – சீறும் ஹெச்.ராஜா
இயற்கை சீற்றத்தால் வயநாடு மக்கள் பேரிழப்பை சந்தித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இந்தப் பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூலம் காசோலையாக வழங்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .