தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தத்தால் பரப்பரப்பு ஏற்பட்டது.
கடந்த 20ம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டதொடர் தொடங்கியது. இதனை தொடர்ந்து மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையும் 21-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று காலை 10 மணிக்கு கூடியது . அதில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான மூன்றாம் நாள் விவாதம் வினாக்கள்- விடை நேரத்துடன் இன்று தொடங்குகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி (rahul gandhi) பேசியிருந்தார்; இதற்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜராகியுள்ள நிலையில்,பாஜக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்( rahul gandhi )காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் , காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதனை தொடர்ந்து Stand with Rahul என்ற பதாகையை ஏந்தி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தனர்.