தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருவதால் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது.இந்த நிலையில் ,இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பானது 100-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அதன்படி கடந்த சில தினங்களாக 1,134 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்தது.‘
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் கொரோனா வைரஸில் புதிய உருமாற்றம் பெற்று இருக்கிற எஸ்பிபி, பிஏ 2 என்கின்ற வைரஸ்கள் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ,அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் சமூக விழாக்கள் ,சமுதாய விழாக்கள் ,அரசியல் நிகழ்வுகள், கூடும்போது முகக் கவசங்களை அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.