ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு தொடர் இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது.
மேலும் ஐசியூ வில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ,இதற்காக இதயவியல் மருத்துவர்கள் வர உள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு அவர் உடல் நலம் குறித்து தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளது. அதில்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளத்து.