தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் (Madivendan) உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மதிவேந்தன். இவர் நாமக்கல்லில் சாந்தி மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
தற்போது தமிழக வனத்துறை அமைச்சராக இருந்து வரும் இவர், ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் அமைச்சர்களில் ஒருவராக உள்ளார். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றியவர்.
ஏற்கனவே இவர் நாமக்கல்லில் சட்டமன்ற தொகுதியிலும், ராசிபுரம் எம்பி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
பின்னர் கடந்த 2021 தேர்தலில், எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு இறுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி கொடுக்கபட்டது. . பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றபோது, சில அமைச்சர்களது துறைகள் மாற்றப்பட்டன.
அப்போது, மதிவேந்தனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை இவரிடமிருந்து பறிக்கப்பட்டு, அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை பதவி பறிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றத்தின்போது மதிவேந்தன் மீண்டும் இடம்பெறுவாரா என்று பேசப்பட்ட நிலையில், வனத்துறை அமைச்சராக மதிவேந்தன் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கு பிறகு, தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் திறன்பட தொடங்கிய மதிவேந்தன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை வனத்துறை சார்பாக மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றார்.
இதையும் படிங்க : Udhayanidhi: மத அரசியலா- மனித அரசியலா? – ஒரு கை பார்த்துவிடுவோம்! -உதய்
இந்த நிலையில், உடல்நகக்குறைவு காரணமாக கோவையிலுள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மதிவேந்தன் (Madivendan) நீண்ட நாட்களாக குடலிறக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இதையும் படிங்க Fishermen arrest- எல்லை தாண்டியதாக இலங்கை குற்றச்சாட்டு!
அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மதிவேந்தனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
இதையும் படிங்க :சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி! – அமைச்சர் உதயநிதி
தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் இருந்து வருகிறார். அமைச்சர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.