தேனியை அடுத்த திண்டுக்கல் மாவட்டம் அருகே ஒட்டகப்பால் ஒரு லிட்டருக்கு 1500 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 100 மில்லி பாலின் விலை 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி கட்டு என்ற திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம் ஒட்டகப் பாலில் டீ போடுமாறு நடிகர் வடிவேலு கூறும் நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அந்தக் காட்சியை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் ஒட்டகப் பால் டீ விற்பனையானது செய்யப்பட்டு வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பொதுவாக பசும்பால் ஒன்றரை நாள் கெடாமல் இருக்கும் ,ஆட்டுப்பால் 14 நாட்களும், கழுதைப்பால் 30 நாள் கெடாமல் இருக்கும். ஆனால் ஒட்டகப்பால் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். காரணம் ஒட்டகப்பாலில் உப்புத்தன்தமை இருக்கும். இதனால் வெகுநாட்கள் கெடாமல் இருக்கிறது.
மேலும் ஒட்டக பாலில் லாக்டோஸ் என்னும் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.இதனை தொடர்ந்து சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பாலை உட்கொண்டால் இன்சுலின் சுரப்பியை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வளர்ச்சி குறைவு (ஆட்டிசம் ) நோயை சரி செய்ய இது உதவியாக உள்ளது.
இந்த நிலையில்,தேனியை அடுத்த திண்டுக்கல் மாவட்டம் அருகே ஒட்டகப்பால் ஒரு லிட்டருக்கு 1500 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 100 மில்லி பாலின் விலை 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த ஓட்டப்பால் பெரும்பாலும் தென் இந்தியாவில் கிடைப்பது இல்லை. இதனால் ஓட்டப்பால் விற்பனையாளர் எப்போது ஓட்டப்பால் கறக்கப்படுகிறதோ அதனை முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.மேலும்இத்தனை மருத்துவ குணங்களை கொண்ட ஒட்டக பாலை வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் குழந்தைகளை கவரும் வகையில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்ய அனுமதியும் ஒட்டகப்பால் விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.