ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், வானதி சீனிவாசன் கருப்பு புடவையில் வருகை தந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டதொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று காலை 10 மணிக்கு கூடியது.
அதில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான மூன்றாம் நாள் விவாதம் வினாக்கள்- விடை நேரத்துடன் தொடங்கியது.
கடந்த 2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி (rahul gandhi) பேசியிருந்தார்; இதற்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜராகியுள்ள நிலையில்,பாஜக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்( rahul gandhi )காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை கலந்து கொள்ள வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்தனர்.
அப்பொழுது இதனை கண்ட வானதி சீனிவாசன் ” தெரியாமல் இன்று கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன்” என புன்னகைத்தபடியே உள்ளே சென்றார்.