சென்னை தலைமை செயலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமை செயலகம் செயல்படுகிறது. இந்த செயலகத்தில், முதலமைச்சர் , அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், தமிழக அரசின் தலைமை செயலாளர் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார்.தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன.
இதையும் படிங்க : போதை வஸ்துக்களால் நிரம்பி இருக்கும் தமிழகம் – வேதனை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
இத் துறைகளுக்குத் தனித்தனியாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளுக்கு ஒன்று சேர்ந்து தனித்தனிச் செயலாளர்கள் உள்ளனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தலைமை செயலகம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு காலை 7.30 மணிக்கு தமிழக அரசின் தலைமை செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெடுகுண்டு வெடிக்கும் என மர்ப நபர் ஒருவர் தெரிவித்துவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1763475689746104503?s=20
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை செய்தனர்.இச்சம்பவமானது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.