சாலை விபத்தில் உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப்பின் உடலுக்கு தென் சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்டாலின் ஜேக்கப் பிரபல புகைப்படக் கலைஞர். 37 வயதான இவர், சென்னையில் தங்கியிருந்து க்ளவுட் கிட்சன் நடத்தி வந்தார். மேலும் What a Karwad என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்துள்ள மறைமலைநகர் அருகே சென்று கொண்டிருந்த போது அவரது பைக் மீது கார் மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவருடன் பணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார். ஸ்டாலின் ஜேக்கப் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப்பின் உடலுக்கு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தென் சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில் தேர்தல் நேரங்களில் உடன் இருந்து களப்பணி ஆற்றிய நபர் தற்பொழுது நம்புடன் இல்லை என்ற செய்தி ஈடு செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளார்