தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிடக் கூடாது என்று மாநில அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தியில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து, சுதிப்தோ சென் இயக்கிய இந்தத் திரைப்படம் the kerala story. இந்த படத்தில்ஆதா ஷர்மா,யோகிதா பிஹானி,பெனடிக்ட் காரெட்,எலீனா கோல்,சித்தி இத்னானி,பிரனாய் பச்சௌரி,பாவனா மகிஜா,சந்திர சேகர் தத்தா,சோனியா பாலானி,விஜய் கிருஷ்ணா,உஷா சுப்ரமணியன்,பிரணவ் மிஷ்ராஆகியோர் நடித்துள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற மே 5 ஆம் தேதி திரைக்கு வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. சர்வதேச எல்லைக்கு முன்னால் நடிகை ஆதா ஷர்மா, புர்க்கா அணிந்து கொண்டு உரையாடும் காட்சியில், ‘ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன்; தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளன். கேரளாவில் இருந்து 32,000 இளம் பெண்கள் இவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டதாக வசனம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வகுப்புவாதம் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் இருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைபடத்தை வெளியிட்டால் கேரளாவை போல் தமிழநாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.