தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலிவுறுத்தி உள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வதி பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் உள்ள பனைமரத்தொட்டி (அம்மன் கோவில்) அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு அன்னதானம் வழங்கினார்.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழகம் முழுவதும் வைரஸ் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நோய் வருவதற்கு முன்னதாக யாரும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கவில்லை,
மேலும் நோய் வந்ததற்கு பிறக்காகத் தான் அதற்கான மருத்துவத்தைத் தேடுகிறார் இந்த ஆட்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன். கொசு உருவாவதைத் தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் இது போன்ற மோசமாகக் கொசு பரவும் நிலை உருவாகி இருக்காது.
தூங்கும் தி.மு.க. அரசு இனியாவது விழிந்திருந்து உடையாகக் கொசு அகற்றும் பணியைச் செய்ய வேண்டும், மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகுக்க வேண்டும்.
முழுமையானஅளவிற்கு வந்திகள் பரவுவதிலிருந்து பாதுகாப்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும். நான் 25 வருடமாக ராயபுத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன் அப்போது தண்ணீர், வடிகால் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.க. மீது இருந்த பயத்தினால் அடிமட்டம் வரையிலும் உள்ளாடைகளைத் துவைக்கும் பணியில் இறங்கி வேலை செய்து ஈரோடு தொகுதியை தி.மு.க. வென்றிருக்கிறது.
ஊழல் செய்வதற்கு அறை எடுத்து யோசிப்பது திமுக தான், அன்று கலைஞர் செய்தார் அவர் வழியில் மகன் ஸ்டாலின் செய்கிறார். எம்.டி.சி.பேருந்துகள் தனியாரிடம் வாங்கக் காரணமே இதைத் தனியார் மூலமாகச் செய்து ஊழல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மேலும் அரசுப் பணியாளர் தேர்வு கூட நடத்த முடியாத அரசாகத்தான் தி.மு.க. உள்ளது. மிக மோசமாக நிர்வாகத் திறன் இல்லாத அரசாங்க தமிழகத்தில் தி.மு.க. ஆள்கிறது என்றார்.