திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்த பிரபு என்கிற பிரபாகரன் (46). கடந்த வாரம் இரவு அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த 3பேர் அலுவலகத்தில் உள்ளே பிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பிரபு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனை தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.மேலும், இந்த கொலையில் திருவெறும்பூர் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன் (32) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.தலைமறைவாக இருந்த அப்புவே காவல்துறையினர் தேடி வந்தனர்.
அப்பு சில ஆண்டுகள் பிரபுவிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்னர் தனியாக ஆம்புலன்ஸ் தொழிலை செய்து வந்தார். இதனால் பிரபுவுக்கும், அப்புவுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. இதனால் அப்பு பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை வைத்து அவரது அலுவலகத்திலேயே கொலையை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி அப்புவை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டனர்.
நேற்று மாலை திருச்சி மாவட்டம், துவாக்குடி செக்போஸ்ட் அருகில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த அப்புவை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் என்னை கொல்ல முயன்றதால் பிரபுவை படுகொலை செய்ததாக ரவுடி அப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் அப்புவை திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியதி
பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.