பாஜக தலைவர் அண்ணாமலை மக்கு மலையாகிவிட்டதாக திமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திமுக அலுவலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திமுக டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது மக்கு மலையாகிவிட்டார்.
நடிகர் கவுண்டமணியின் ஆடு ஆங்கிலம் பேசும் காமெடியை ஒப்பிட்டு பேசிய விஜயன் என்ன நடக்கிறது என தெரியாமல் ஆடு போல் அண்ணாமலை அவர்கள் செய்திகளை சொல்வதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளார். டெல்டா பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி , தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருகியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர். டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ரத்து செய்துள்ள பெருமை ஸ்டாலினுக்கு தான் உண்டே தவிர மக்கு மலைகளுக்கெல்லாம் கிடையாது என்பதை விவசாயிகளும் நாட்டு மக்களும் அறிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியீட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாததை தமிழக அரசு செய்துள்ளது.
விவசாயிகளுக்காக தொடர்ந்து பணியாற்றுகின்ற முதல்வர் ஸ்டாலினுக்கு நீங்கள் செய்வது நல்ல செயல் அல்ல என்றும்
பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டிப்பதாகவும் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.