Jayalalitha scheme | இன்று மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாளாகும்.
தமிழகம் முழுவதும் இன்று அவருடைய பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழக அரசியலை மாற்றி அமைத்த பெண் சிங்கம் என பெயர் பெற்றவர்.
ஜெயலலிதா அவர்கள் 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 1992ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டத்தினைத் தொடங்கினார்.
அதற்கு காரணம் கிராமங்களில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் அவலம் நடந்துகொண்டிருந்தது.

இதனால் பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகள் ஆகியோரை அரசே வளர்க்கும் என்று இத்திட்டத்தைக் கொண்டு வந்தார் புரட்சித் தலைவி அவர்கள்.
அன்று முதல் தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்படுகிறார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் புரட்சித் தலைவி முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் முக்கியமான திட்டங்களுள் ஒன்று மகளிர் காவல்நிலையம்.
இதையும் படிங்க:Petitions |எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள்!
பெண்களின் பிரச்சினைகளுக்கு என்று தனியாக மகளிர் காவல் நிலையம் வேண்டும் என்று முடிவு செய்து இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தற்போது வரை இது நடைமுறையில் உள்ளது.
இதுமட்டுமல்லாது கள்ளச்சாராயம் ஒழிப்பு, லாட்டரி சீட்டுத் தடை, நில அபகரிப்புச் சட்டம் என்று மக்களுக்கு பயன்பெறும் வகையில் சட்டங்களை கொண்டுவந்தார்.
மேலும் முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதாவின் புகழ் இன்றளவும் நிலைக்க செய்தது அம்மா உணவகம் திட்டம்.ஏழை எளிய மக்களுக்கு பசியாற உணவு வழங்க வழிவகை செய்தது.

இன்று வரை ஏழை எளிய மக்கள் தங்களின் பசியை குறைந்த செலவில் போக்குவதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.
ஏழை எளிய மாணவர்களுக்கு சீருடை வழங்கினார். பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கி அவர்களின் கல்விக்கு உதவினார்.
புரட்சித் தலைவி ஜெயலலிதா தாலிக்கு தங்கம் மற்றும் திருமணத்திற்கு உதவித்தொகை ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1761296960211018091?s=20
இதனை தொடர்ந்து உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடி உயரமாக அதிகரித்து விவசாயிகளின் துயரத்தை போக்கினார்.
இதற்காக நீண்டதொரு சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக 2014 ஆக., 22ல் மதுரையில் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர்.
மேலும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி.,(1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) தண்ணீர் தரவேண்டும் என 1991ல் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா தொடர்ந்து போராடி வந்தார். இறுதியில் 2013 பிப்., 20ல் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
இதன் மூலம் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தினார்.