உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரத்தில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் குப்பாபூரில் திரபதி தியாகி என்ற பள்ளி ஆசிரியர், 2-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவரை வைத்து அடிக்க வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் அந்த மாணவனை மத ரீதியாக விமர்சித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக திருப்தா தியாகி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சக மாணவரை கொண்டு மற்றொரு மாணவரை ஆசிரியர் அடிக்க செய்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு, உத்தர பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் ஆணையிட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரத்தில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் நடவடிக்கை எடுக்க அனைத்து தன்மைகள் இருந்தும் சரியான நேரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கடும் குற்றமாக இருக்கையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் தந்தை கொடுத்த வாக்குமூலம் எதுவும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும் வழக்குப்பதிவு செய்ய ஏன்காலதாமதம் ஆகியுள்ளது யென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனை தொடர்ந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவனின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனைகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள்,
இவ்விவகாரத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.