இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாது உலகில் உள்ள தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக வலம் வந்தவர் எம் எஸ் தோனி. ரசிகர்களின் பேராதரவில் வெற்றி நடை போட்டு வந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் .
ஓய்வுக்கு பின் ஐ பி எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த இவர் இயற்கை விவசாயம் மற்றும் பல துறைகளில் சத்தமின்றி கால்பதித்துள்ளார் . அந்த வகையியில் ‘தோனி எண்டர்டென்மெண்ட்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் ‘தோனி எண்டர்டென்மெண்ட்’ சார்பில் தயாராகும் முதல் படமே தமிழ் படம் என்ற அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது .
’LGM’ LETS GET MARRIED என்று பெயர்கொண்டுள்ள இத்திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி உள்ளார் . ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ‘லவ் டுடே’ நாயகி இவானா, நதியா, யோகி பாபு உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
சத்தமின்றி முழுவீச்சில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகி ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . இந்த படத்தின் Teaser நேற்று வெளியானது .
எம்.எஸ்.தோனி மற்றும் அவரது காதல் மனைவி சாக்ஷி தோனி இருவரும் ’LGM’ படத்தின் டீசரை நேற்று இரவு 7 மணிக்கு வெளியிட்டனர் .
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ’LGM’ படத்தின் டீசரை பார்த்தல் நகைச்சுவை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் எப்போது வெளியாகும் என படக்குழு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .