நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டடப்பட்டது.இந்த நிலையில் 74வது குடியரசு தினத்தையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டனர்.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கே. சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையிலான மோதல் காரணமாக குடியரசு தின விழாவில் தேசிய மூவர்ண கொடியேற்றும் நிகழ்வில் முதல்வர் பங்கேற்கவில்லை என்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் முதல்வர் ஆளுநர் மற்றும் ஆளுநர் கருத்து விவகாரம் தொடர்பாக குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
ஆனாலும், குடியரசு தின நிகழ்வில் முதல்வர் பங்கேற்கவில்லை என்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனை தொடர்ந்து இந்த தகவல் வியாழக்கிழமைகாலை வரை ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை.இதையடுத்து, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராகவும் ,துணைநிலை ஆளுநர் பதவியையும் சேர்த்து கவனித்து வருகிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
On the occassion of 74th #RepublicDay2023 hoisted our National Flag at Rajbhavan #Hyderabad.
நம் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தெலுங்கானா ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினேன்.#RepublicDay@rashtrapatibhvn @PMOIndia @narendramodi @HMOIndia pic.twitter.com/NkDaMJW98i
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) January 26, 2023
குடியரசு தின விழாவில் முதலமைச்சர் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை,
“வரம்பு மீறல், சட்ட மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என எல்லா மீறலும் தெலங்கானாவில் செய்துள்ளனர். மத்திய அரசுக்கு இதுகுறித்து எனது தகவலை அனுப்பியுள்ளேன்,” என்று கூறினார்.
“நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகாவது தெலங்கானா அரசு வழக்கமாக நடத்தும் அணிவகுப்பு மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்தியிருக்க வேண்டும்.
சமீபத்தில் ஐந்து லட்சம் பேரை திரட்டி கூட்டம் நடத்திய முதல்வர், கொரோனா பரவலை காரணம் காட்டி குடியரசு தின நிகழ்வை நடத்தாமல் தவிர்த்திருக்கிறார்” என்று தமிழிசை என்று குற்றம்சாட்டினார்
முதல்வரின் ஆதாரவாளர் செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கருதுகிறேன்.இந்த நிகழ்வால் இன்னொருவர் வாழ்க்கை பாதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து,அரசின் இந்த நடவடிக்கையை தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது.அரசாங்கத்தின் முடிவு ஜனநாயகமற்றது மற்றும் அரசியலமைப்பின் மாண்புக்கு எதிரானது என்று மாநில பாஜக தலைவர் சஞ்சய் தெரிவித்தார்.
ஆளுநர் கொடியேற்றும் நிகழ்வை முதல்வர் புறக்கணிப்பது, அரசியலமைப்பின் சிற்பியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிப்பதற்கு சமம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.