தெலங்கானாவில் காதல் மனைவி கண்முன்னே கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
தெலங்கானாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு அம்ருதவர்தினி என்ற பெண்ணும் தலித் இளைஞரான பெருமுல்லா பிரனும் காதலித்து திருமணம் சேவித்துக்கொண்டனர் . அம்ருதவர்தினி பெற்றோர் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெருமுல்லாவின் பெற்றோர் இளம் ஜோடியை மனதார ஏற்றுக்கொண்டனர்.
ஆனந்தமாய் இல்லற வாழ்வை தொடங்கிய இருவரும் சந்தோசமாக வாழந்த நிலையில் அம்ருதவர்தினி 2018 ஆம் ஆண்டு கருவுற்றிருந்தார் இதற்காக தனது தாய் மற்றும் மனைவியுடன் பெருமுல்லா மருத்துவமனைக்கு சென்ற சென்றுள்ளார் அப்போது அம்ருதவர்தினி தந்தையின் உத்தரவின் பேரில் மருத்துவமனையில் பதுங்கி இருந்த ஒருவர் பயங்கர ஆயுதத்துடன் பின்னால் வந்து பெருமுல்லாவை தாக்கியுள்ளார்.
Also Read : 100 ஹீரோக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது – வாகை சந்திரசேகர்
இதில் சம்பவ இடத்தில சுருண்டு விழுந்த பெருமுல்லா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெருமுல்லா மனைவி மற்றும் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்பேரில் கூலிப்படையை ஏவி கொலை செய்த அம்ருதவர்த்தினியின் தந்தை மாருதி ராவ் உள்பட 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாருதி ராவ் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் 2ஆவது குற்றவாளியான சுபாஷ் குமாருக்கு மரண தண்டனை விதித்து தெலங்கானா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.