பாக்கியலட்சுமி சீரியலில் (baakiyalakshmi serial) கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஷ் குமார் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் (baakiyalakshmi serial) பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலட்சுமி ஆகியோரும்..
மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ், இளைய மருமகள் அமிர்தாவாக ரித்திகா தமிழ்செல்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
கதைப்படி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் கோபி, அசால்ட்டாக நடித்து ஸ்கோர் செய்து வந்த நிலையில், இன்னும் 10 – 15 எபிசோட்களுடன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் விலக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், அவர் வெளியிட்ட அந்த வீடியோ பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இனி வரும் நாட்களில் கோபியாக நடிகர் பப்லூ பிரித்விராஜ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக பப்லூ நடித்து வந்த ‘கண்ணான கண்ணே’ சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து, நடிகர் பப்லூ பிரித்விராஜ் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பப்லூவை எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே சமயம் பிரித்விராஜும் தனது சிறப்பான நடிப்பால், கோபி கதாபாத்திரத்துக்கு சரியாக பொருத்தமாக இருப்பார் என்றே பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.