தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக (Temperature) சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் .
உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read : https://itamiltv.com/8050-polling-booths-are-tense-in-tamil-nadu/
இதேபோல் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை (Temperature) ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.