சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் Thalaivar 170 படத்தின் டைட்டில் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கும் படத்தில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது . அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தலைவரை கொண்டாடும் வகையில் அவரின் பிறந்தநாள் டீசர் வீடியோவும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே தலைவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வரும் நிலையில் அவறுகளுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படக்குழுவிடம் இருந்து வந்துள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.