உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறிருப்பதாவது :
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பாவிடம் இருந்து உறுதியான ஆதரவை பெற்றுள்ளோம். உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்பதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
Also Read : சீமான் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை..!!
அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எங்களுக்குத் தேவை அமைதி, முடிவில்லா போர் அல்ல என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ஜெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் அமெரிக்காவிற்கு உக்ரைன் நன்றியுடன் இல்லை என கடுமையான விமர்சித்திருந்த நிலையில் தற்போது ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.