தரங்கம்பாடி Tharangambadi அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி Tharangambadi தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு தெருவில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவில் உள்ளது.
தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைகாளியும், நல்லவைகளை அருளும் சாந்த சொரூபினியாக, தில்லையம்மனுமாக இருவடிவமாக இந்த திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப் பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோயில் முன் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு நேற்று முதல் காலை யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின் யாக சாலையில் இருந்து குடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்தது.
கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதையும் படிங்க : மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 26)
இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக நிகழ்வின் போது பல பெண் பக்தர்களுக்கு சுவாமி வந்து ஆடினர்.