தனது செயல்பாடுகளை பாராட்டி கடிதம் எழுதிய 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ்வை நேரில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.
அதில்,பெருமதிப்பிற்குரிய சுகாதாரத்துறை அவர்களுக்கு,வணக்கம். நான் கோயமுத்தூர்மாவட்டம் காளப்பட்டி சாலை நேருநகரில் உள்ள எஸ். எஸ்.பி வித்யா நிகேதன் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறேன் வழக்கறிஞர் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என பன்முகதிறன்கள் கொண்ட உங்களுக்கு கடிதம் எழுதுவதில் பெருமகிம் அடைகிறேன்.
ஏழ்மை குடும்பத்தில் பிறந்த நீங்கள் ” முயன்றால் முடியாதது எதுவுமில்லை” என்ற வார்த்தைக்கிணங்க வாழக்கையில் பல சாத்னைகளை புரிந்து கொண்டுருக்கிறீர்கள் – குறிப்பாக நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சரான பிறகு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பெரும்பாலான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
காரணம். அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ள சுகாதாரம், தரமான மருந்துகள் மற்றும் நவீன உபகரணங்கள்- 2 “மாரத்தான் மன்னன்” என்னும் அடைமொழிக்கிணங்க 100-மாரத்தான்களில் கலந்து உலக சாதனை புரிந்த உங்களை கண்டு வியந்துள்ளேன்.
இந்த வயதிலும் சுறு சுறுப்போடும், தன்னப்பிக்கை யோடும் இருக்கும் நிங்கள் இந்த சிறுவனுக்கு ஊக்கமளிக்கும் சில வரிகள் உங்களிடமிருந்து பதில் கடிதமாக எழுதவேண்டும். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தனது செயல்பாடுகளை பாராட்டி கடிதம் எழுதிய 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.