சமீபத்தில் ராஜ்பவன் மீதான தாக்குதல் என்பது ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள் நடத்திய அநாகரீகமான பேச்சுகளின் விளைவு தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திமுக கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டார்.
ஆர்.எஸ். பாரதி பேசியது என்ன?
அப்போது பேசிய அவர் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர். எஸ். பாரதி, ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். எத்தனயோ ஆளுநர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த ஆளுநர் என்ன செய்கிறார் என்றால், வேண்டுமென்றே அரசை வம்பு சண்டைக்கு இழுக்கிறார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள். தவறாக நினைக்க வேண்டாம். நான் ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்.
நாகாலந்தில் நாய் இறைச்சியை திண்பார்கள். அவர்களுக்கே அந்த அளவிற்கு சொரணை இருந்து, இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு உணவு உண்ணும் தமிழனுக்கு எந்த அளவிற்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் உணர வேண்டும்” என ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டித்து பேசியிருந்தார்.
அண்ணாமலை கண்டனம்:
சமீபத்தில் ராஜ்பவன் மீதான தாக்குதல், மாண்புமிகு ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள் நடத்திய அநாகரீகமான பேச்சுகளின் விளைவுதான், ஆனாலும் திமுக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
https://x.com/annamalai_k/status/1721404219964465567?s=20
நமது வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.