நாகப்பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம்… எடுத்தவுடனே நாகப்பாம்பு எதையும் – தீண்டிவிடுவதில்லை .
எதிராளிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பிறகே, தீண்டும். கேரளாவில் வீட்டின் முற்றத்தில் இறங்கிய சிறுவன், நாகப்பாம்பை பார்க்காமல் அதே மேல் கால் படாமல் கடந்து செல்கிறான்.
பாம்புகளுக்கு காது இல்லாததால், அதிர்வுகளை வைத்து உணரக்கூடியவை. அதிர்வை உணர்ந்த நாகப்பாம்பு அடுத்த விநாடி பின்வாங்குகிறது. பொதுவாக, ‘கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ‘சுருட்டை விரியன் பாம்புகள் மிதித்தவுடன் தீண்டி விடும் குணமுடையவை.
ஆனால், நாகப்பாம்பு எடுத்தவுடனே தீண்டி விடுவதில்லை. எதிராளிக்கு ஒரு வாய்ப்பளிக்கும். மேலும், தனது விஷத்தை எளிதாக விரையம் செய்து விடவும் நாகப்பாம்பு விரும்பாது.தாடி வாடுவதல்லை எதாராளக்கு ஒரு வாய்ப்பளிக்கும்.
மேலும், தனது விஷத்தை எளிதாக விரையம் செய்து விடவும் நாகப்பாம்பு விரும்பாது. படமெடுத்து ஆடுவது கூட, எதிராளியை மிரட்டவே. அந்த வகையில்தான், சிறுவன் தன்னை மிதித்ததும் உடனடியாக, கடிக்காமல் நாகப்பாம்பு சற்று பின் வாங்குகிறது.
தொடர்ந்து, சிறுவனின் தாயார் பாம்பை பார்த்து விடவே சிறுவன் தூக்கிக் கொள்கிறார். எதிராளிக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுப்பதால்தான், நாகப்பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர் வழங்கலாயிற்று.
இதே இடத்தில், விரியன் ரக பாம்புகளாக இருந்திருந்தால், முதலில் கடித்து விட்டுதான் மறு வேலை பார்க்கும். அதுவும், நாகப்பாம்பை விட மிக வேகமாக விரியன் ரக பாம்புகள் தீண்டும் குணமுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.