கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் மீண்டும் இன்று அமலாகத்துறையினர் சோதனை(raid )நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜிஇக்கு தொடர்புடைய இடங்களின் கடந்த மாதம் வருமான வரிதுறையினர் சோதனை(raid) நடத்தினர். அந்த சோதனையில் சகோதரர் , நண்பர்கள், உறவினர் வீடுகள் மற்றும் அரசு ஒப்பந்ததார்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் வருமான வரிதுறையினர் சென்னை ,கோவை,கரூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தி இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை வருமான துறையினர் கைப்பற்றினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.