மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் துருவ் . சீயான் விக்ரமின் அன்பு புதல்வனான இவரது நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா , மஹான் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
Also Read : தொல்லை கொடுத்த EX காதலன் – புது காதலனை ஏவி ரிவெஞ்ச் எடுத்த இளம்பெண்..!!
அந்தவகையில் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படமே பைசன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெறித்தனமாக உருவாகி வரும் இந்த படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக சினிமா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.