The high price of garlic : சென்னையில் ஒரு கிலோ பூண்டின் விலை 250 ரூபாய்க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களில் பூண்டின் விலை 250 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டது. முன்னதாக தக்காளி, வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தபோது, மத்திய அரசு தலையிட்டு விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இதேபோல் பூண்டு விலை உயர்வை தடுக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று வணிகர்களும் இல்லத் தரசிகளும் கவலை அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க : May 1 Gold Rate : திடீர் சரிவில் தங்கம் விலை! மாத தொடக்கத்தில் இன்ப அதிர்ச்சி!
அதுமட்டுமல்லாமல் துரித உணவகங்கள் ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு மற்றும் கோழி இறைச்சி விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் தொழிலை நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையில்,
தற்போது அசைவ உணவுகளில் முக்கிய சுவையூட்டியாக பயன்படுத்தப்படும் பூண்டின் விலையும் உயர்ந்திருப்பது உணவக உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்தும் பூண்டின் வரத்து கணிசமாக குறைந்திருக்கும் நிலையில், இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அடுத்த 15 நாட்களுக்கு பூண்டின் விலை குறைய வாய்ப்பில்லை எனவும் வியாபாரிகள் தெரிவிப்பதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இந்த சூழலில் பூண்டின் தேவை அதிகரித்துள்ளதால் ஆன்லைன் வியாபாரிகள் பூண்டு பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன The high price of garlic.
பதுக்கல் காரணமாக தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் தர பூண்டு 1 கிலோ 250 ரூபாய்க்கும்; இரண்டாம் ரக பூண்டு 200 ரூபாய்க்கும்; மூன்றாம் தர பூண்டு 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : திடீர் சரிவில் தங்கம் விலை!